உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் தமிழக வீரர் சைலேஷ் முதலிடம்

சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் தமிழக வீரர் சைலேஷ் முதலிடம்

சென்னை, சென்னை அடுத்த காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலை ஆதரவுடன், கோல்டன் நைட்ஸ் அகாடமி மற்றும் மாஸ்டர் மைன்டு செஸ் அகாடமி இணைந்து, சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தின.முதன்முறையாக நடத்தப்படும் இப்போட்டியில், இந்தியாவின் எட்டு மாநிலங்களை சேர்ந்த, 446 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 226 வீரர்கள் பிடே ரேட்டிங் பெற்றவர்கள்.எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மேஜர் தியான் சந்த் உள் அரங்கில், கடந்த 16ம் தேதி போட்டிகள் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தன.போட்டியின் முதல் சுற்றிலிருந்தே, தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதி சுற்றின் முடிவில், தமிழக வீரர்கள் சைலேஷ், ஹரிகணேஷ், விக்னேஷ், ரோஷன், அபிநந்தன், அஜேஷ், அய்யப்பன், பிரவீன், ராமநாதன், விஜய்ஸ்ரீராம் முறையே, முதல் 10 இடங்களை பிடித்தனர்.முதல் இடம் பிடித்த சைலேஷ், 50,000 பரிசுத் தொகையுடன், சாம்பியன் கோப்பையையும் வென்றார்.தவிர, குழந்தைகள் பிரிவில் பங்கேற்று, முதல் 80 இடங்களைப் பிடித்த சிறுவர் - சிறுமியருக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை