உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அமைச்சர் கனவில் வசூலை அதிகரித்த பெண் மேயர்!

அமைச்சர் கனவில் வசூலை அதிகரித்த பெண் மேயர்!

“மீட்டிங் நடத்த நேரம், காலம் இல்லையா வே...” என, புலம்பியபடியே பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.“என்ன விஷயம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.“கூட்டுறவு துறையின் மாவட்ட அலுவலகங்கள்ல, ராத்திரி 9:00 மணி வரைக்கும், இணை பதிவாளர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்'ல மீட்டிங் நடத்துதாவ... அதாவது, சாயந்தரம் 5:00 மணிக்கு மீட்டிங்கை துவங்கி, ராத்திரி 9:00 மணி வரைக்கும் பேசிட்டே இருக்காவ வே...“கூட்டுறவு துறையில், 60 சதவீதம் பணியாளர்கள் பெண்கள் தான்... பெரும்பாலும் இவங்க, ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய் சமையல் செஞ்சு, குடும்பத்தை கவனிக்கிற சூழல்ல இருக்காவ வே...“இப்படி ராத்திரி, 9:00 மணி வரை மீட்டிங் நடத்துறதால, அதுக்கப்புறம் பஸ்சை பிடிச்சு வீட்டுக்கு போய் நடுராத்திரி வரைக்கும் சமையல் வேலை பார்க்க வேண்டியிருக்கு... 'வாரத்துல குறைஞ்சது ரெண்டு நாளாவது இப்படி மீட்டிங் போடுதாவ... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா'ன்னு பெண் பணியாளர்கள் புலம்புதாங்க வே...” என்றார், அண்ணாச்சி.“கான்ட்ராக்டர்களுக்கு எச்சரிக்கை குடுத்துட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“மதுரை மாநகராட்சி யில், நாளுக்கு நாள் மக்கள் தொகை ஜாஸ்தியாயிட்டே போறது... அதுக்கு ஏற்ப குடிநீர் சப்ளை பண்றதுக்காக, 1,653 கோடி ரூபாய்ல பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிகளை செய்றா ஓய்...“ஆனா, 'இந்த பணிகள் ஆமையை விட ஸ்லோவா நடக்கு'ன்னு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கிண்டல் அடிச்சுட்டு இருக்கார்... 'இந்த திட்ட பணிகளை மே முதல் வாரத்துக்குள்ள முடிச்சு, முதல்வர் ஸ்டாலின் கையால துவக்கி வைக்கணும்'னு மாநகராட்சிக்கு சென்னையில் இருந்து உத்தரவு வந்திருக்கு ஓய்...“மாநகராட்சி கமிஷனர் சித்ரா, பெரியாறு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தாங்க... இதுல, பணிகளை செய்ற சென்னையை சேர்ந்த கான்ட்ராக்டர்கள் மந்தமா இருக்கான்னு தெரிஞ்சது ஓய்...“அவாளிடம், 'ஏப்ரல் எண்டுக்குள்ள பணிகளை முடிச்சுடணும்... இல்லேன்னா உங்க பில்கள் மூவ் ஆகாது'ன்னு கமிஷனர் எச்சரிக்கை பண்ணியிருக்காங்க... இப்ப, பணிகள் வேகமா நடக்கறது ஓய்...” என்றார், குப்பண்ணா.“அமைச்சராகிடுவேன்னு சொல்லியே, வசூல் வேட்டை நடத்துறாங்க...” என்றார், அந்தோணிசாமி.“யார் ஓய் அது...” என கேட்டார், குப்பண்ணா. “தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியில் இருக்கிற, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் மேயரை தான் சொல்றேன்... வர்ற சட்டசபை தேர்தல்ல, எம்.எல்.ஏ., 'சீட்' கேட்டு, கட்சி மேலிடத்திடம், 'துண்டு' போட்டு வச்சிருக்காங்க...“தேர்தல் செலவுக்கு, இப்பவே பணம் தேத்த துவங்கிட்டாங்க... மாநகராட்சி பணிகளை, 'டெண்டர்' எடுத்து செய்ற கான்ட்ராக்டர்களிடம் ஏற்கனவே குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் வாங்கிட்டு இருந்தவங்க, இப்ப டபுள் மடங்கா கமிஷன் கேட்கிறாங்க...“கேட்டா, 'அடுத்தும் எங்க ஆட்சி தான்... அதுல நான் அமைச்சராக போறேன்'னு அசால்ட்டா சொல்றாங்க... தன் வசூல் வேட்டைக்கு சரிப்பட்டு வராத அதிகாரிகளை மாத்துங்கன்னு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் நெருக்கடி தர்றாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.“என் ஒய்ப் ஓட பிரெண்டு பிரியா ஊர்லேந்து வரா... நான் கிளம்பறேன்...'' என்ற படியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 03, 2025 10:25

சேகர் பாபுவைப் பிடித்து எம்.எல்.ஏ அமைச்சர் என்று ஏற்றிவிடலாம் என்று கனவு போலிருக்கிறது அவர் பெயரே நாறிக்கிடக்கிறது. இவருக்குத்தான் முதலில் சீட் கிடைக்குமாக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை