உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சர்வே முடிவுகளை பார்த்து அரண்டு போன ஆளுங்கட்சி!

சர்வே முடிவுகளை பார்த்து அரண்டு போன ஆளுங்கட்சி!

''முதல்வரின் கனவு திட்டத்துலயே முறைகேடு நடக்கறது ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கிராமங்கள்ல இருக்கிற துவக்கப்பள்ளிகள்ல, முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்பாட்டுல இருக்கோல்லியோ... ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை ஒருங்கிணைத்து, இந்த திட்டத்தை செயல்படுத்தறா ஓய்...''இந்த குழுக்கள்ல இருந்து, கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒருத்தரை நியமித்து, அவருக்கு சம்பளமும் வழங்கறா... துாத்துக்குடி மாவட்டத்துல சில பள்ளிகள்ல, சம்பளம் வழங்கறது, சமையல் பொருட்கள் வாங்கறதுல நிறைய முறைகேடு நடக்கறதா, கோவில்பட்டி யூனியன், பாண்டவர்மங்கலம் துவக்கப்பள்ளியின் சமையலர் முருகலட்சுமி, முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் அனுப்பி இருக்காங்க ஓய்...''அதுல, தமிழ்நாடு வாழ்வாதார இயக்க மேலாளர் துணையோடு, கூட்டமைப்பு பொறுப்பாளர், காலை உணவு திட்ட நிதியில முறைகேடு பண்றதா குறிப்பிட்டிருக்காங்க... 'இதுக்கு தீர்வா, பஞ்சாயத்து கூட்டமைப்பு பொறுப்பாளர்களை, சுழற்சி முறையில் தேர்வு செய்யணும்'னு சமையலர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சங்கர் இங்கன உட்காரும்... உம்ம தங்கச்சி ஜெயபாரதி சவுக்கியமா வே...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, ''வேளாண் பல்கலைக் கழகம் அமைய விடாம தடுக்காவ வே...'' என்றார்.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மதுரையில வேளாண் பல்கலை அமைக்கப்படும்'னு அறிவிச்சு, நாலு வருஷம் ஓடிட்டு... கோவை வேளாண் பல்கலை அதிகாரிகள் சிலர், 'இன்னொரு பல்கலை வந்தா, நம்ம முக்கியத்துவம் குறைஞ்சிடும்'னு பயப்படுதாவ வே...''இதனால, 'புதுசா பல்கலை அமைக்கணும்னா, பல நுாறு ஏக்கர் நிலம் வேணும்... வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆடிட்டோரியம்னு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை செலவாகும்'னு அரசை பயமுறுத்துதாவ வே...''ஆனா, மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 354 ஏக்கர் நிலம் இருக்கு... இங்க ஏற்கனவே கூடுதல் கட்டடங்கள், வகுப்பறை, ஆய்வகங்கள் நிறைய இருக்கு வே...''தனியா ஒரு அரசாணை போட்டு, மதுரை வேளாண் கல்லுாரியை வேளாண் பல்கலைன்னு பெயர் மாத்தினா போதும்... ஆனாலும், அதிகாரிகள் பேச்சை கேட்டு, அரசு அலட்சியமா இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''சர்வேயால அதிர்ச்சியில இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''த.வெ.க., தலைவர் விஜய், கோவையில் பூத் ஏஜன்ட்கள் மாநாட்டை நடத்தி, கூட்டத்தை காட்டியது ஆளுங்கட்சிக்கு பதற்றத்தை குடுத்திருக்கு... 2021 சட்டசபை தேர்தல்ல, கோவையில இருக்கிற 10 சட்டசபை தொகுதிகள்ல ஒண்ணுல கூட தி.மு.க., ஜெயிக்கல பா...''அதே நிலைமை, 2026 தேர்தல்லயும் வந்துடக் கூடாதுன்னு, 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியை அங்க தி.மு.க., களம் இறக்கி விட்டிருக்கு... அவரது ஏற்பாட்டுல, கோவை மாவட்டம் முழுக்க தனியார் ஏஜன்சி வாயிலா சமீபத்துல ஒரு சர்வே எடுத்திருக்காங்க பா...''மகளிருக்கு மாசம் 1,000 ரூபாய் உரிமை தொகை உட்பட பல நலத்திட்டங்களால, அரசுக்கு அமோக ஆதரவு கிடைக்கும்னு ஆவலா காத்திருந்தாங்க... ஆனா சர்வேயில, 'விஜய்க்கு தான் எங்க ஓட்டு'ன்னு பலரும், குறிப்பா பெண்கள் வெளிப்படையா சொன்னதை கேட்டு, ஆளுங்கட்சி வட்டாரம் அரண்டு போயிருக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Indian
ஜூன் 03, 2025 09:58

திமுக காரன் இல்லாவிட்டால் ....


Dhandapani Dhandapani
ஜூன் 02, 2025 12:27

Wawe


krishnan
ஜூன் 01, 2025 22:28

சாதி வரி கணக்கு எடுப்பு _- குற்றவாளிகள் பொம்பளை கற்பழிப்பு . இடுப்பு கிள்ளல் ..ரோமியோ வேலை ..திருட்டு , பொறுக்கித்தனம் இவைகளில் என்னென்ன சாதி என கணக்கு ஐடா வேண்டும் . பொருக்கி பசங்க எதில் அதிகம் ?


krishnan
ஜூன் 01, 2025 22:25

1000 ரூபா பெண்களுக்கு கொடுத்தால் - பெண்கள் கற்பழிப்பு , இடுப்பு கிள்ளல் , பஸ்ஸில் இளக்காரம் , சாராயம் மூலம் மொத்த பண வசூல் , கவுன்சிலர் அராஜகங்கள் , மட்டமான கட்டு ணம் , போலீஸ் இடுப்பை கிள்ளினாலும் ஒன்னும் இல்லை , சவுக்கு நிருபர் போன மாசம் ஹெல்மட் போடததற்கு இப்போ அர்ரெஸ்ட் , ...இது என்ன நிர்வாகம்


RAMESH
ஜூன் 01, 2025 21:40

ரோடு ஷோ....... சகோதரர்கள் சந்திப்பு எல்லாம் வேஸ்ட்....மதுரையில் ஒரு பணியும் நடைபெறவில்லை..... பாராளுமன்ற உறுப்பினர் மேல் உள்ள கோபம் அதிமுக தவெக... கூட்டணி முந்துகிறது


V.Mohan
ஜூன் 01, 2025 19:58

தமிழர்களும் தமிழ்நாடும் திமுகவின் அடிமைகள் தான். பிறந்த குழந்தை முதல் அனைத்து தமிழர்களும் வெட்க மானம் இல்லாமல் லஞ்சத்தை ஊக்குவிக்கின்றனர். தமிழ் நாட்டில் தமிழர்கள் அத்தனை பேரும் இந்த லஞ்சத்தின் அடிமைகள். தைரியமற்ற கோழைகள். லஞ்சத்தை நிறுவனமாக்கிய கிரிமினல்கள். ஒரு சதவிதம் மக்கள் கூட லஞ்சம் தரமுடியாது என்று சொல்லும் நெஞ்சுத்துணிவு அற்ற கோழைகள். இப்படி மாற்றியது லஞ்சத்திமுக தான்.


D.Ambujavalli
ஜூன் 01, 2025 18:52

1967 இல் அண்ணாவின் வாய் ஜாலமும், காங்கிரசில் தலையெடுத்திருந்த சில அதிருப்த்தியாளர்களும் தான் திமுகவின் நுழைவுக்குக் காரணமாக இருந்தன அதே வழியில் கலைஞரும் பேச்சுத்திறத்தால் நிலைக்க முடிந்தது தற்போது போல அவர்கள் துண்டுச்சீட்டைக்கூட எழுத்துக்கூட்டிப் படிக்கவும் தெரியாது நிற்கவில்லை தற்போதைய கட்சிகள் கதை வசனம் எழுத்தும் சிலர் கைகளில்தான் இயங்குகின்றன


metturaan
ஜூன் 01, 2025 14:53

ஆக... ஆருடம் பனையூர் பண்ணையார் கையில் தமிழ் நாடு... கடவுளே.. இன்னும் என்னென்ன கொடுமைகளை எல்லாம் தமிழ்நாடும் தழிழர்களும் அனுபவிகனுமோ தெரியல


Venkatanarayanan S
ஜூன் 01, 2025 14:18

மதவாத கட்சிகள் அதன் ஆதரவு கூட்டாளிகள் வந்தால் தமிழ் நாட்டை வடக்கனுக்கு விற்பதனுடன் தமிழர்களை அடிமைகள் போல் நடத்துவார்கள் உதாரணம் எடப்பாடி ஆட்சி அவரின் அடிமைத் தனத்தால் தமிழ் நாடு ஊழல் மாநிலமாக மாறியது


Durai Raj
ஜூன் 01, 2025 19:31

இப்போது?


panneer selvam
ஜூன் 07, 2025 19:00

You may be right , last 4 years , you got independence from Central Government and spread corruption at each and every level . Congrats , you have done wonderful job . Tomorrow even to walk on the street , you have to pay to local party functionaries but problem is your womenfolk will be unsafe to walk alone


Udayasuryan
ஜூன் 01, 2025 13:51

டாஸ்மாக் லஞ்சம் எது எடுத்தாலும் ஊழல் குடிகாரனகிட்ட பிச்சைகாரன்கிட்ட எல்லாரிடமும் 10 ரூவா பிச்சை எடுத்தா யாரு உனக்கு ஓட்டு போடுவாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை