மேலும் செய்திகள்
பங்குனி உத்திர திருவிழாஉற்சவர் திருவீதி உலா
06-Apr-2025
சேலையூர், சேலையூர் அடுத்த, மாடம்பாக்கத்தில் தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்று நாள் பங்குனி உத்திர திருக்கல்யாண தெப்பத் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாளில் இரவு 8:30 மணிக்கு, விநாயகர் தெப்ப உலா மற்றும் திருவீதி உலா நடந்தது. இரண்டாம் நாளான நேற்று, இரவு 8:30 மணிக்கு சுப்பிரமணியர் தெப்ப உலா மற்றும் திருவீதி உலா நடந்தது.இன்று, காலை பஞ்மூர்த்திகள் அபிஷேகம், அம்பாள் புஷ்ப அலங்கார சாத்துப்படி, திருக்கல்யாணம், இரவு ஊஞ்சல் சேவை, திருக்கல்யாண மூர்த்தி தெப்ப உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
06-Apr-2025