உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / இன்று இனிதாக (05.10.2025)

இன்று இனிதாக (05.10.2025)

ஆன்மிகம் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா மூன்றாம் நாளில் அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி, செண்டை மேளம் முழங்க, நகர்வலம் வருதல், இரவு 7:00 மணி. இடம்: மணலிபுதுநகர். சித்சபா மணிக்கூடம் புரட்டாசி சதுர்த்தசி நடராஜர் அபிஷேகம், மதியம் 2:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை. இலவபுரீஸ்வரர் கோவில் ஆடலரசன் குழுவினரின் கோவிலில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: செங்குன்றம் சாலை, விளாங்காடுபாக்கம். பொது பட்டிமன்றம் சிதம்பர ராமலிங்க சுவாமிகள், 203வது பிறந்த நாள் தின விழா - முனைவர் மா.கி.ரமணன் தலைமையில் பக்தி பட்டிமன்றம், காலை 10:30 மணி. இடம்: ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம், பட்டினத்தார் கோவில் தெரு, திருவொற்றியூர். ஆண்டு விழா மகாத்மா காந்தி நுால் நிலையம் 73வது ஆண்டு விழா, பங்கேற்பு: கர்நாடக இசை பாடகர் ராஜ்குமார் பாரதி, திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன், காலை 10:30 மணி. இடம்: ஸ்ரீ விஜயராகவலு திருமண மண்டபம், பெருமாள் கோவில் தெரு, சைதாப்பேட்டை. என்.சி.சி., மாணவர்கள் சந்திப்பு கடந்த 1987 - 2025 முதல் என்.சி.சி., மாணவர்கள் சந்திப்பு, காலை 10:00 மணி. இடம்: காயிதே மில்லத் ஆண்கள் கல்லுாரி, மேடவாக்கம் இலவச கண் சிகிச்சை முகாம் பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கருத்தரங்கு, காலை 9:00 மணி முதல். இடம்: சாஸ்திரி முதல் குறுக்கு தெரு, காவேரி நகர், சைதாப்பேட்டை. இலவச மருத்துவ முகாம் ஸ்ரீராம் அருள் ஒளி ஆயுர்வேத பஞ்ச கர்மா சிகிச்சையகம் சார்பில், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 203வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இலவச ஆயுர்வேத ஆலோசனை மருத்துவ முகாம், காலை 9:00 மணி. இடம்: கே.ஜி.எல்., லாட்ஸ் அருகில், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர். கேரம் போட்டி திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., - உதயநிதி கேரம் கோப்பைக்கான, கேரம் விளையாட்டு போட்டி, காலை 6:00 மணி முதல். இடம்: திருவொற்றியூர் எம்.எல்.ஏ., அலுவலகம், கே.வி.கே. குப்பம், திருவொற்றியூர். பாட்டு நிகழ்ச்சி சம்சுதீனின் ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ரா பங்கேற்பில், 'செவாலியர் சிவாஜி கணேசன் எவர் கிரீன் சாங்ஸ்' பாட்டு கச்சேரி, மாலை 6:30 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை. வாராகி வித்யா சபாவின் நவராத்திரி கலை விழா. பி.ஆர்.எஸ்., மியூசிக் அகாடமி மாணவியரின் பாட்டு, மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை