மேலும் செய்திகள்
கோவில் நிலம் ' கூறு ' ; லஞ்சம் ' தாறுமாறு '
17-Sep-2024
''குற்றப்பிரிவை கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.''போலீஸ் தகவலா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ஆமா... தமிழகத்துல,சட்டம் - ஒழுங்கு பராமரிப்புல ஆர்வம் காட்டுற உயர் போலீஸ் அதிகாரிகள், குற்றப்பிரிவை பெருசா கண்டுக்கிறதில்ல பா...''சட்டம் - ஒழுங்கு சரியா இருந்தா தான்,அரசுக்கு நல்ல பெயர்னுநினைக்கிறாங்க... ரவுடிகள், போதை பொருட்களை பிடிக்கிறதுல தான் குறியா இருக்காங்க பா...''தமிழகம் முழுக்கவேகுற்றப்பிரிவுல போலீசார்பற்றாக்குறை இருக்கு... இதனால, திருட்டு வழக்குகளை விசாரிக்க முடியாமதிணறுறாங்க பா...''சில இடங்கள்ல புகார்களை வாங்கி, சி.எஸ்.ஆர்., ரசீதை மட்டும் கொடுத்துட்டு, வழக்கு பதிவு பண்ணாமஇழுத்தடிக்கிறாங்க... அதனால, 'குற்றப்பிரிவையும் அதிகாரிகள் கொஞ்சம் கவனிக்கணும்'னுஅந்த பிரிவு போலீசார்எதிர்பார்க்கிறாங்க பா...''என்றார், அன்வர்பாய்.''கான்ட்ராக்டர்கள் கலக்கத்துல இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறினார் குப்பண்ணா.''எந்த துறையிலங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.''திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் நகராட்சியில,கடந்த மார்ச் மாத முடிவுல,வரிகள் முழுமையா வசூலாகாம, நிறைய தொகை நிலுவையில இருந்துது... இது சம்பந்தமா, உயர் அதிகாரிகள் மாறி மாறி கேள்வி கேட்டுண்டே இருந்தா ஓய்...''உடனே, நகராட்சி முக்கிய புள்ளி, அதிகாரிகளுக்கு ஒரு ஐடியா தந்திருக்கார்... இதன்படி,நகராட்சி பணிகளை செய்ற கான்ட்ராக்டர்களிடம், தலைக்கு 3 முதல் 5 லட்சம்னு வசூல் பண்ணி, 30 லட்சம்ரூபாய் வரி வசூல்பண்ணிட்டதா அதிகாரிகளுக்கு கணக்குகாட்டிட்டா ஓய்...''மக்களிடம் வரிகளைவசூல் பண்ணி, தங்களுக்குசெட்டில் பண்ணுவான்னுகான்ட்ராக்டர்கள் காத்துண்டு இருந்தா... ஆனா, அவாளிடம் வாங்கிய, 'அமவுன்ட்' பத்தி, அதிகாரிகள் மூச்சு கூட விட மாட்டேங்கறா... இதனால, நகராட்சி அதிகாரிகள் மேல கான்ட்ராக்டர்கள் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''நல்ல மரங்களை எல்லாம் வெட்டி கடத்துதாவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''--நீலகிரி மாவட்டம்,பந்தலுார் மற்றும் தேவாலா பகுதிகள்ல அரசுக்கு சொந்தமான டான்டீ தேயிலை தோட்டங்கள் இருக்கு... வனத்துறையிடம் இருந்து குத்தகைக்கு வாங்கிய நிலத்துல தான், இந்த தோட்டங்கள் செயல்படுது வே...''டான்டீ தேயிலை தோட்டங்கள்ல இருக்கிற காய்ந்த, 'சில்வர் ஓக்' மரங்களை வெட்டுறதா சொல்லி, நல்லா இருக்கிற பழமையான மரங்களையும் வெட்டி கடத்துதாவ... இந்த மரங்கள் எல்லாம் எங்க போகுதுன்னு தெரியல வே...''இன்னொரு பக்கம், கோத்தகிரி பகுதியிலயும்சில்வர் ஓக் மரங்களை வெட்டுறதா கணக்கு காட்டி, வனப் பகுதியில்இருக்கிற காட்டு மரங்களையும் சிலர் வெட்டி கடத்துதாவ... இந்த மரங்களை குஞ்சப்பனை சோதனை சாவடி வழியா, ராத்திரிநேரமா கடத்திட்டு போயிடுதாவ வே...''சோதனை சாவடியிலஇருக்கிறவங்களையும்கவனிச்சிடுதாவ... தினமும், 30க்கும் மேற்பட்ட லாரிகள்ல மேட்டுப்பாளையத்துலஇருக்கிற, 'சா மில்'களுக்குஇந்த மரங்கள் போகுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
17-Sep-2024