உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டூ-வீலரை கொளுத்தியவர் கைது

டூ-வீலரை கொளுத்தியவர் கைது

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், 22, என்பவருக்கும், கடந்தாண்டு நடந்த ஜாத்திரை விழாவின் போது தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் ஆனந்தராஜ், குடிபோதையில் ரவி வீட்டிற்கு சென்று, ரவியின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியும், தடுக்க வந்த ரவி மனைவி ஜமுனா, 44, என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஜமுனா கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ