மாமாவை தாக்கிய மச்சான் கைது
கொடுங்கையூர்,கொடுங்கையூர், எழில் நகர் 3வது தெருவைச் சேர்ந்த நாகராஜ், 30, இவர், குப்பைமேட்டில் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் வேலை செய்கிறார்.இவரது தங்கை மோகனாவை, அவரது கணவர் தினேஷ் என்பவர், ஒரு மாதத்திற்கு முன் அடித்துள்ளார்.இது குறித்து மோகனா, தன் அண்ணனான நாகராஜிடம் சொல்லியுள்ளார். அவரும், தினேஷை அழைத்து கண்டித்துள்ளார்.இந்த முன்விரோதம் காரணமாக, 30ம் தேதி மாலை, மதுபோதையில் தன் நண்பருடன் வந்த தினேஷ், நாகராஜை கத்தியால் தோள்பட்டையில் பலமாக தாக்கி தப்பியோடி விட்டார்.காயமடைந்த நாகராஜை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தினேஷ், 28, சிவா, 26, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.தினேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஒன்பது வழக்குகளும், சிவா மீது கொலை வழக்கும் உள்ளன.