உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  தலைமை செயலகம் அருகில் தடையின்றி கஞ்சா விற்பனை!

 தலைமை செயலகம் அருகில் தடையின்றி கஞ்சா விற்பனை!

“அ மைச்சர் பதவிக்காக ஆலா பறந்துட்டு இருக்காரு வே...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய். “திருச்சி மாவட்டத்துல இருக்கிற த.வெ.க., - எம்.எல்.ஏ., ஒருத்தரை தான் சொல்லுதேன்... தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத இவர், கட்சியின் மேலிட புள்ளி சிபாரிசுல, 'சீட்' வாங்கி ஜெயிச்சாரு வே... “த.வெ.க., அமைச்சரவையில் முத்தரையர் சமூகத்தினர் யாரும் இல்லாததால, அந்த சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும்னு நம்பிட்டு இருக்காரு... இதுக்காக, தனக்கு, 'சீட்' வாங்கி குடுத்த மேலிட புள்ளியையே சுத்தி சுத்தி வர்றாரு வே... “இதனால, எம்.எல்.ஏ.,வாகி நாலு மாசமாகியும், தொகுதியில முக்கால்வாசி இடங்களுக்கு நன்றி சொல்லக்கூட போகல... தொகுதி மக்கள், இவருக்கு போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேங்காரு வே... “தனக்கு மூணு உதவியாளர்களை வேற வச்சிருக்காரு... இப்ப, இந்த தொகுதியின் மாவட்டச் செயலரா இருக்கும் ஜெகன் என்பவரது பதவியை பறிக்க, தீவிரமா காய் நகர்த்திட்டு இருக்காரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “வாங்க விக்னேஷ்... முசிறி போயிட்டு எப்ப வந்தீங்க...” என நண்பரிடம் விசாரித்த அந்தோணிசாமியே, “வந்த மூணே மாசத்துல, ஆளை விட்டா போதும்கிற முடிவுக்கு வந்துட்டாருங்க...” என்றார். “யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவை பத்தி ஏகப்பட்ட புகார்கள் குவியுது... கட்டட அனுமதி வழங்குறதுல தாமதம், ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பேனர்கள் அகற்றத்துல சரியா நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறாங்க... “இந்த பிரிவுக்கு, மூணு மாசத்துக்கு முன்னாடி தான் ஒரு உயர் அதிகாரியை நியமிச்சாங்க... ஆனாலும், பணியாட்கள் பற்றாக்குறை, பிற துறை அதிகாரிகளின் அத்துமீறலால, உயர் அதிகாரி வெறுத்து போயிட்டாருங்க... “இதனால, 'இன்னும் ரெண்டு வருஷத்துல ஓய்வுபெற போறேன்... இங்க இருந்து என்னால சிரமப்பட முடியாது'ன்னு புலம்புறவர், வேற மாநகராட்சிக்கு மாறுதல் கேட்டுட்டு இருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி. “தாமோதரன், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என, நண்பரை இழுத்து பிடித்த குப்பண்ணாவே, “தலைமை செயலகம் பக்கத்துலயே கஞ்சா விற்பனை நடக்கறது ஓய்...” என்றார். “அடப்பாவமே... விளக்கமா சொல்லுங்க...” என்றார் அந்தோணிசாமி. “சென்னை, தலைமை செயலகத்தை ஒட்டி போர் நினைவு சின்னம் இருக்கோல்லியோ... இதன் பக்கத்துல இருக்கற அன்னை சத்யா நகர்ல, கஞ்சா விற்பனை அமோகமா நடக்கறது ஓய்... “இத்தனைக்கும், பூக்கடை காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்டை போலீஸ் ஸ்டேஷனே, தலைமை செயலக வளாகத்துக்குள்ள தான் இருக்கு... இங்கிருந்து, 850 மீட்டர்ல தான் சத்யா நகர் இருக்கு... கஞ்சா விற்பனை பத்தி உளவுத்துறை போலீசாரும் கண்டுக்கறது இல்ல ஓய்... “அதேநேரம், கஞ்சா விற்பனை பத்தி தகவல் கிடைச்சு போலீசார் யாராவது அங்க போனா, அவா கையில 5,000 முதல் 10,000 ரூபாய் வரை திணிச்சு அனுப்பிடறா... அவாளும் வாங்கீண்டு கமுக்கமா திரும்பி போயிடறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா. அரட்டை முடியவும், பெரியவர்கள் நடையை கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
செப் 24, 2026 16:52

இருக்கவே. இருக்கு. Standard வசனம். 'நாங்க. வந்து. 4. மாசம்தான். ஆச்சு திமுக ஆட்சியிலே. நடந்தது '. இதைச். சொல்லியே. 5. வருஷத்தை. ஓட்டிடுவோமே


V.Mohan
செப் 24, 2026 16:04

திரு ஜோசப் விஜய் அவர்கள் தன்னுடைய சினிமாக்களை வெளிவரவிடாமல் ஏதாவதொரு வெட்டிக்காரணத்துடன் தடுத்த தீயமகவுற்கு எதிர்ப்பு காட்டத்தான அரசியலுக்கே வந்தார். டாஸ்மாக், கஞ்சா ஒழிப்பு கொள்கைகளுக்காக ஒன்றும் அவர் அரசியலுக்கு வரவில்லை கோபம் தாங்க முடியாமல் தான் வந்தார். ,அதனால் அவருக்கு மற்ற விஷயங்கள் பற்றி அக்கறை அதிகம் இல்லை. நல்லா விடிஞ்சுறும். தமிழ் நாட்டுக்கு


Anantharaman Srinivasan
செப் 24, 2026 15:44

தவெக ஆட்சியில் கஞ்சா விற்பனைக்கும் head quarters தலைமை செயலகம் அருகில் தானா..?? பேஷ்பேஷ்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 24, 2026 11:02

அருகில் வித்தா தப்பில்லை. தலைமேல செயலகத்துக்குள்ள வித்தா சொல்லுங்க நாங்க வந்து கப்புன்னு புடிச்சுக்குறோம் .


S.V.Srinivasan
செப் 24, 2026 08:24

அமோக கஞ்சா விற்பனை, அதுவும் தலைமை செயலக அருகில் தொட்டதுக்கெல்லாம் லஞ்சம், ஊழல் என்றும் பார்க்கும்போது இப்போதய அரசு அதிக நாள் நீடிக்காது என்று தோன்றுகிறது. ரீல் லைப் வேறு ரியல் லைப் வேறு என்பதை விஜய் உணர வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் அடித்த வசனங்கள் காற்றோடு போய் விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை