புகார்பெட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
திருத்தணி அரசு கலைக் கல்லுாரிக்கு காலை மற்றும் மாலை நேரத்தில்,10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கல்லுாரியில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால், மாணவர்கள் படிகளில் ஆபத்தான முறையில் தொங்கியப்படி பயணம் செய்கின்றனர். எனவே, கல்லுாரி வேலை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.-- க.விநாயகம், திருத்தணி.