தகவல் சுரங்கம்
பாலைவனத்தில் ஒரு சோலை
ராஜஸ்தான் சிரோஹி மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளது அபு மலை. ராஜஸ்தானின் ஒரே மலைவாசஸ்தலம். நீளம் 22 கி.மீ. அகலம் 9 கி.மீ. இதிலுள்ள உயரமான சிகரம் 'குரு சிஹார்'. உயரம் சராசரி கடல்நீர்மட்டத்தில் இருந்து 5650 அடி. இதன் உயரமே ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான வனப்பகுதிகளுக்கு ஆதாரமாக இருப்பதால் இது 'பாலைவனத்தில் ஒரு சோலை' என அழைக்கப்படுகிறது. ஹிந்து, ஜெயின் கோயில்கள் உள்ளன. குளிர்காலத்தில் இங்கு சராசரி வெப்பநிலை 13 - 22 டிகிரி செல்சியஸ். இதன் மக்கள்தொகை 23 ஆயிரம்.