தகவல் சுரங்கம்
சுனாமி தினம்கடந்த 2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து எழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரியை 'சுனாமி' தாக்கியது. 12,000 பேர் பலியாகினர். இதில் 7000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலுார், கன்னியாகுமரி பாதிக்கப்பட்டன. இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.