தகவல் சுரங்கம்
நட்பின் சின்னம்
அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்று சுதந்திர தேவி சிலை. இது நியூயார்க்கில் லிபெர்டி தீவில் உள்ளது. தாமிரம், இரும்பினால் செய்யப்பட்ட இச்சிலை நட்பின் வெளிப்பாடாக பிரான்ஸ் சார்பில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. 1875ல் பிரான்சில் இதற்கான பணி தொடங்கியது. 1885ல் கப்பலில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டது. 1886 அக். 28ல் திறக்கப்பட்டது. சிலை உயரம் 151 அடி. பீடத்துடன் சேர்த்து சிலை உயரம் 305 அடி. சிலையின் எடை 204 டன். சிலையின் கீழிருந்து தலையில் உள்ள கிரீடம் வரை ஏறிச்செல்ல படிகள் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்படுகிறது.