தகவல் சுரங்கம்
பெண் நீதிபதிகள் தினம்
நீதியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் பெண் நீதிபதிகளின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், அனைத்து நாடுகளும் நீதித்துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் மார்ச் 10ல் பெண் நீதிபதிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆண்களை விட பெண் நீதிபதிகள் அதிகம் உள்ளனர். அங்குள்ள உச்சநீதிமன்றங்களில் 41 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்.