தகவல் சுரங்கம்
உலக சைக்கிள் தினம்
சைக்கிள் பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 3ல் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினமும் நடை, ஓட்டம், விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல் என ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. இதிலும் நடை, சைக்கிள் பயிற்சி இதய பாதிப்பு, பக்கவாதம், கேன்சர், நீரிழிவு போன்ற பாதிப்புகளை தடுக்கிறது. சைக்கிளுக்கு எரிபொருள் தேவையில்லை என்பதால் செலவு இல்லை. முக்கியமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுகிறது. தினமும் சைக்கிள் ஓட்டுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.