உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

நீண்டதுார போக்குவரத்து நெரிசல்

டில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசலால், கூடுதலாக 20 - 25 நிமிடம் ஆகிறது. இந்நிலையில் உலகின் பெரிய போக்குவரத்து நெரிசல் சீனாவில் 2010 ஆக. 14ல் நிகழ்ந்தது. தலைநகர் பீஜிங் -- திபெத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 12 நாட்களுக்கு நீடித்தது. 100 கி.மீ., துாரத்துக்கு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்திருந்தன. மக்கள் 12 நாளும் வாகனத்திலேயே தங்க நேர்ந்தது. தற்காலிக கூடாரம் ஏற்படுத்தப்பட்டது. தற்காலிக கடைகள் உருவாகின. பெரிய கன்டெய்னர் வாகனம் நடுவழியில் பழுதடைந்ததே காரணம். ஆக. 25ல் போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி