தகவல் சுரங்கம் : நாடுகளும்... மொழிகளும்...
தகவல் சுரங்கம்நாடுகளும்... மொழிகளும்...உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழி இருக்கும். உலகில் அதிக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை கொண்ட நாடு பொலிவியா. இங்கு 37 மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஸ்பானிஷ்' முக்கிய மொழி. இரண்டாவது இடத்தில் இந்தியா (22 மொழி) உள்ளது. இதில் ஹிந்தி, ஆங்கிலம் அலுவல் மொழி. மூன்றாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவில் (12 மொழி), அனைத்து மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்னில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொழி இல்லை.