தகவல் சுரங்கம்: கணிதத்தின் முக்கியம்
தகவல் சுரங்கம்கணிதத்தின் முக்கியம்கணிதத்தில் 'பை' முக்கியமானது. 1706ல் கணித அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் 'பை' என்ற எண்ணுக்கு நாம் பயன்படுத்தும் குறியீடை வடிவமைத்தார். எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் 'பை' என்ற மிக முக்கிய எண் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 14ல் உலக 'பை' தினம் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம் 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 (அமெரிக்க முறையில் தேதி) குறிப்பதுதான். அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இத்தினத்தில் பிறந்தவர். 1988ல் அமெரிக்க இயற்பியல் அறிஞர் லேரி ஷா இத்தினத்தை உருவாக்கினார்.