வானிலை மைய வரலாறு
மழை, புயல், வெப்பநிலை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட வானியல் தகவல்களை வழங்கும் விதமாக இந்திய வானிலை மையம் செயல்படுகிறது. இது 1875 ஜன.15ல் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் டில்லி. இதற்கு சென்னை, மும்பை, கோல்கட்டா, நாக்பூர், கவுகாத்தி, டில்லி என ஆறு மண்டல அலுவலகங்கள் உள்ளன. உலக வானிலை மையத்தின் ஆறு மண்டல சிறப்பு மையங்களில் இந்திய வானிலை மையமும் ஒன்று. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம், அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி பகுதிகளுக்கு வானியல் தகவல்களை, சென்னை வானிலை மையம் அளிக்கிறது.