தகவல் சுரங்கம் : உலக அகதிகள் தினம்
தகவல் சுரங்கம்உலக அகதிகள் தினம்போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட சூழல்களில் மக்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அகதிகளாக உருவாக்கப்படுகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அகதிகளுடன் ஒற்றுமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 2025 ஜூன் கணக்கின்படி வன்முறை, மனித உரிமை மீறல் உள்ளிட்டவற்றால் வலுக்கட்டாயமாக 1௨ கோடி பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். இதில் 4.25 கோடி பேர் அகதிகள். 6.78 கோடி பேர் உள்நாட்டுக்குள் புலம் பெயர்ந்தோர்.