தகவல் சுரங்கம் : உலக சுகாதார தினம்
தகவல் சுரங்கம்உலக சுகாதார தினம்சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்.7ல் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் 1948 ஏப்.7ல் நிறுவப்பட்டது. இந்நாளே உலக சுகாதார தினமாக உருவாக்கப்பட்டது. உலகில் ஆண்டுதோறும் 3 லட்சம் பெண்கள், பிரசவத்தின் போது உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்துக்குள் உயிர்இழக்கின்றனர். எனவே பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.