தகவல் சுரங்கம் : சிரிக்கும் பறவை
தகவல் சுரங்கம்சிரிக்கும் பறவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் வாழ்கிறது 'கூகாபாரா' பறவை. இதன் ஆண், பெண் இனம் ஒரே மாதிரி இருக்கும். இதன் நீளம் 41 - 47 செ.மீ. உயரம் 43 செ.மீ., வெள்ளை, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும் இவை காடுகளில் வாழும். புழு, பூச்சிகளோடு, கொடிய விஷமுள்ள பாம்புகளையும் உண்ணும். அதிகாலை, மாலையில் சூரிய மறைவுக்குப் பின் இவை ஒலி எழுப்பும். இவ்வொலி மனிதர்கள் சிரிப்பது போல் இருக்கும் என்பதால் இவை 'சிரிக்கும் கூகாபாரா' என அழைக்கப்படுகிறது. ஆண் பறவையின் சராசரி எடை 307 கிராம், பெண் பறவையின் சராசரி எடை 352 கிராம்.