தகவல் சுரங்கம் : சட்ட மேலவை உள்ள மாநிலங்கள்
தகவல் சுரங்கம்சட்ட மேலவை உள்ள மாநிலங்கள்இந்தியாவில் 28 மாநிலங்களில் சட்டசபை உள்ளன. இதன் உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.,) மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆந்திரா, பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, உ.பி.,யில் சட்ட மேலவை உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதி 169, இது பற்றி குறிப்பிடுகிறது. இதில் உறுப்பினராக (எம்.எல்.சி.,) இந்திய குடிமகன், குறைந்தது 30 வயது, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட தகுதிகள் இருக்க வேண்டும். அரசு ஊழியராக இருக்கக்கூடாது. பதவிக்காலம் 6 ஆண்டுகள். தமிழகத்தில் இருந்த சட்ட மேலவை 1986ல் கலைக்கப்பட்டது.