தகவல் சுரங்கம் : பசுமையான நாடுகள்
தகவல் சுரங்கம்பசுமையான நாடுகள்உலகின் பசுமையான நாடுகள் பட்டியலில் சுவீடன் முதலிடத்தில் உள்ளது. 2045க்குள்'ஜீரோ கார்பன்' வெளியீடு இலக்கை நோக்கி செல்கிறது. அந்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 50சதவீதம் புதுப்பிக்கத்தக்க முறையில் (சோலார், காற்றாலை, நீர்) பெறப்படுகிறது. 2வது இடத்தில் பின்லாந்து உள்ளது. 3வது இடத்தில் உள்ள ஐஸ்லாந்தில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க முறையில் மின்சாரம் உற்பத்தியாகிறது. 4வது இடத்தில் டென்மார்க் உள்ளது. இது 2030க்குள் 'ஜீரோ கார்பன்' என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. 5வது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 80 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்துகிறது.