தகவல் சுரங்கம் : காடுகளின் முக்கியத்துவம்
தகவல் சுரங்கம்காடுகளின் முக்கியத்துவம்பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூமியில் 80 சதவீத பல்லுயிரினங்களுக்கு காடுகள் தான் வாழ்விடம். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 40 சதவீதம், காடுகளில் இருந்து கிடைக்கிறது. பூமியின் நிலப்பரப்பில் 30 சதவீதம் உள்ள காடுகள், ஆண்டுக்கு 800 கோடி டன் கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சுகிறது. இதன்மூலம் வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தை தடுக்க உதவுகிறது. உலகின் 54 சதவீத காடுகள், பிரேசில், கனடா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில் உள்ளன.