தகவல் சுரங்கம்:சர்வதேச எரிசக்தி அமைப்பு
பல்வேறு துறைகளிலும் எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து நாடுகளுக்கும் இது அவசியம். உலகில் 1973ல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி காரணமாக 1974ல் சர்வதேச எரிசக்தி அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ளது. இது சர்வதேச எரிசக்தி துறையில் கொள்கை பரிந்துரைகள், பகுப்பாய்வு, தரவு ஆகிய பணிகளை மேற்கொள்கிறது. இதில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 32 நாடுகள் உறுப்பினராக உள்ளன. மேலும் இந்தியா, சீனா, சிங்கப்பூர் உட்பட 13 நாடுகள், இணை உறுப்பினராக உள்ளன.