தகவல் சுரங்கம் : சிங்கம், உயிரி எரிபொருள் தினம்
தகவல் சுரங்கம்சிங்கம், உயிரி எரிபொருள் தினம்'காடுகளின் ராஜா' சிங்கம். இதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 10ல் உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. முன்பு ஆப்ரிக்காவில் 2 லட்சம் சிங்கங்கள் இருந்தன. இன்று 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. இந்தியாவில் சிங்கத்தின் எண்ணிக்கை 2020ல் 674. 2025ல் 891 ஆனது.* பசுமை எரிபொருளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக. 10ல் உலக உயிரி எரிபொருள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.