தகவல் சுரங்கம் : நீதிபதிகளின் ஓய்வு வயது
தகவல் சுரங்கம்நீதிபதிகளின் ஓய்வு வயதுஇந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 (உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 62). அமெரிக்காவில் நீதிபதிகளுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்கப்படவில்லை. அந்நாட்டில் பணியில் உள்ள வயதான நீதிபதி லியோ கிளாஸர் 100. இவர் நியூயார்க் மாகாண கிழக்கு மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். அடுத்து பவுலைன் நியூமேன் 98, பெடரல் சர்கியூட் நீதிபதியாக இருக்கிறார். இவரே அமெரிக்காவின் தற்போதைய நீதிபதிகளில் நீண்டகாலம் (41 ஆண்டு, 315 நாட்கள்) பதவி வகிப்பவர். பிரிட்டனில் நீதிபதிகள் ஓய்வு வயது 75. சீனாவில் ஆண் நீதிபதிக்கு 60, பெண் நீதிபதிக்கு 55.