தகவல் சுரங்கம்:வானவில் தேசம் எது
வானவில் தேசம் எதுஆப்ரிக்க நாடுகளில் ஒன்று தென் ஆப்ரிக்கா. இங்கு பல இனம், மொழி, கலாசாரம் உடைய மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். இந்நாட்டின் அலுவல் மொழி மொத்தம் 12. இதன் காரணமாக இந்நாடு 'வானவில் தேசம்' என அழைக்கப்படுகிறது. நிறவெறி காலத்துக்குப்பின், நாட்டின் பன்முகத்தன்மையை குறிப்பிடும் விதமாக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. இதன் மக்கள்தொகை 6.30 கோடி. பரப்பளவு 12 லட்சம் சதுர கி.மீ., இந்நாட்டின் கடற்கரையின் நீளம் 2798 கி.மீ. நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் உள்ளிட்டவை இதன் எல்லை நாடுகளாக உள்ளன.