உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : செயற்கையான நீர்வழிப்பாதை

தகவல் சுரங்கம் : செயற்கையான நீர்வழிப்பாதை

தகவல் சுரங்கம்செயற்கையான நீர்வழிப்பாதைமத்திய தரைக்கடல், செங்கடலை இணைக்கும் விதமாக செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வழிப்பாதை சூயஸ் கால்வாய். இதன்மூலம் ஆசியா - ஐரோப்பா இடையிலான நீர்வழி போக்குவரத்து எளிதாகியது. அரபிக்கடலில் இருந்து லண்டன் செல்லும் மொத்த துாரத்தில் 9,000 கி.மீ., குறைந்தது. எகிப்தில் அமைந்துள்ள இக்கால்வாய் பணி, 1859ல் தொடங்கி 1869ல் நிறைவடைந்தது. நீளம் 193 கி.மீ. கடல் நீர், கால்வாய் வழியே பாயும் வகையில் உருவாக்கப் பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 97 கப்பல்கள் இரு வழியிலும் சென்று வருகின்றன. இதில் பெரும்பாலானவை சரக்கு கப்பல்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !