உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பெரிய ரயில் நிலையம்

தகவல் சுரங்கம் : பெரிய ரயில் நிலையம்

தகவல் சுரங்கம்பெரிய ரயில் நிலையம்உலகின் பெரிய ரயில் நிலையம் சீனாவின் ஷாங் சிங் கிழக்கு நகரில் 301 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுஉள்ளது. இது தலைநகர் பீஜிங்கில் இருந்து 1761 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கான செலவு ரூ. 65 ஆயிரம் கோடி. இது 170 கால்பந்து மைதானங்களுக்கு இணையானது. ஒரு நாளைக்கு 3.84 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. மூன்று தளங்களை கொண்டது. 15 பிளாட்பார்ம், 29 ரயில் பாதைகள் உள்ளன. 'வை-பை', டிஜிட்டல் திரை, குளிர்சாதன வசதி உட்பட விமான நிலையத்துக்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
செப் 19, 2025 06:50

சீனா எதைச்செய்தாலும் பிரம்மாண்டமாகவே gigantic செய்கிறது. அதற்கான நிதியும் அவர்களிடம் ஏராளமாக உள்ளது. நம் நாட்டிலும் இது போன்றவற்றை கட்டமைக்கலாம், அதற்கான நிதி தான் பற்றாக்குறை. எனினும் நமது நாடும் பொருளாதாரத்தில் முன்னேறி உலகில் 2ஆம் நிலைக்கு வந்த பின் இது சாத்தியம் என்று நாம் நம்புவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை