தபால், வலசை பறவைகள் தினம்
* தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், தகவல் பரிமாற்றத்தில் தபால் முக்கிய பங்கு வகித்தது. உலக தபால் அமைப்பு 1874ல் தொடங்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் அக். 9ல் உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 6.60 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. ‘ஒரே தபால் கட்டமைப்பு : எல்லையற்ற சாத்தியக்கூறுகள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. * ஐ.நா., சார்பில் அக். 9ல் உலக வலசை பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘ஒவ்வொரு பறவையும் முக்கியம் – உங்கள் கவனிப்பு முக்கியமானவை’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.