தகவல் சுரங்கம் கிரீன்லாந்தின் முக்கியத்துவம்
தகவல் சுரங்கம்கிரீன்லாந்தின் முக்கியத்துவம்கிரீன்லாந்தை' அமெரிக்கா குறிவைப்பதற்கு அப்பகுதியின் தாதுப்பொருள் வளங்கள், பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஆர்டிக் - அண்டார்டிக் பெருங்கடலின் இடையே கிரீன்லாந்து உள்ளது. உலகின் மிகப்பெரிய தீவு என அழைக்கப்படுகிறது. டென்மார்க்கின் கீழ் செயல்பட்டாலும், இது ஒரு தன்னாட்சி பகுதி. இதன் தலைநகரம் நுாக். பரப்பளவு 21.6 லட்சம் சதுர கி.மீ. இதில் 80 சதவீதம் பனிப்பிரதேசமாக உள்ளது. 56 ஆயிரம் பேர் மட்டுமே வாழ்கின்றனர். இது உலகில் மக்கள் அடர்த்தி குறைந்த நாடு. உலகின் பெரிய தேசியப்பூங்கா இங்கு உள்ளது.