தகவல் சுரங்கம்: வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபருக்கு ‘வெள்ளை மாளிகை’ தான் வீடு. உலகின் அதிகாரமிக்க இடம் இது தான். இதனால் உலக நாடுகளின் பார்வை இதன்மீது எப்போதும் இருக்கும். இது வாஷிங்டனில், பென்சில்வேனியா அவென்யூவில் உள்ளது. இதனை அயர்லாந்து கட்டிடக் கலைஞர் ஜேம்ஸ் ஹோபன் வடிவமைத்தார். ‘நியோ கிளாசிக்கல்’ கட்டிடக்கலையில் வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணி 1792 முதல் 1800 வரை நடந்தது. 1801ல் இருந்து அதிபர் மாளிகையாக செயல்படுகிறது. 1814 போரில் தீயில் நாசமாகியது. பின் மறு சீரமைக்கப்பட்டது.