உள்ளூர் செய்திகள்

20 நிமிடங்களில் புற்றுநோய் சோதனை

புற்றுநோய் என்பதே ஒரு கொடிய நோய் தான். அதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு நல்லது. நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிய தற்போது இருக்கும் ஒரே வழி சிடி ஸ்கேன் தான். இதன் வாயிலாக சில நேரம் புற்றுநோய் இருப்பதைத்தெளிவாக அறிய முடியாது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் இந்த வசதி கிடைப்பதில்லை. அதனால், நுரையீரலில் புற்றுநோயைக் கண்டுபிடிக்க எளிய வழி ஒன்றை அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் கண்டறிந்துள்ளது.ஆஸ்துமாவுக்கான 'இன்ஹேலர்' போன்ற தொரு கருவி வாயிலாக நோயாளிகளுக்குச் சில நானோ துகள்கள் கொடுக்கப்படும். நானோ துகள்கள் புற்றுநோய் கட்டிகளில் உள்ள 'ப்ரோடியேசஸ்' எனும் நொதியுடன் வினைபுரியும். பின் நோயாளிகளின் சிறுநீர் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் வாயிலாக நோய் இருப்பது கண்டறியப்படும். மனிதர்களுக்கு ஏற்படுவது போன்ற நுரையீரலில் புற்றுநோயை எலிகளில் செயற்கையாக விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர். 7.5 வாரங்களுக்குப் பின் கட்டிகள் நன்கு வளர்ந்த நிலையில், புதிய முறையில் சோதனையைத் தொடங்கினர். சோதனை முடிவு சரியாக இருந்தது. இந்தப் புதிய முறை, விரைவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட உள்ளது. இதிலும் வெற்றி கிட்டினால் இந்தச் சோதனை முறை பயன்பாட்டிற்கு வந்துவிடும். வெறும், 20 நிமிடங்களில் நுரையீரல் புற்றுநோய் உள்ளதா இல்லையா என்ற முடிவு தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !