உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. செயற்கைக்கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாத படி கண்காணிக்க ஹவாய் தீவில் புதிதாக 7 தொலைநோக்கிகளை வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கு உள்ளூர் ஹவாய் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.02. மெலடோனின் என்பது துாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஹார்மோன். துாக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு அதைத் துாண்டக்கூடிய மருந்துகள் தரப்படுவது வழக்கம். அமெரிக்காவைச் சேர்ந்த கேஸ் வெஸ்டர்ன் மருத்துவப் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இந்த மருந்துகள் முதுமையால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.03. துருவ ஒளி போல் விண்ணில் ஊதா நிறத்தில் தோன்றிய ஒளியை 2017ல் ஆய்வாளர்கள் படம் எடுத்தனர். இதற்கு ஸ்டீவ் என்று பெயரிட்டனர். வேகமாக நகரும் வாயுக்கள் சட்டென்று சூடாவதால், இந்த ஒளி தோன்றுகிறது. தற்போது நார்வே நாட்டில் இதே போன்ற ஒளி தோன்றியுள்ளது. 04. மத்திய ஆசியாவின் முதல் 3டி வீடு (3 டி பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட வீடு) கஜகஸ்தான் நாட்டின் அல்மாத்தி நகரில் கட்டப்பட்டுள்ளது. அடிக்கடி பூகம்பம் ஏற்படும் இடம் என்பதால், பூகம்பத்தையும் தாங்கும் வகையில் வீடு அமைக்கப்பட்டுள்ளது.05. கொரிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (KASA) செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. 2045ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு கொரியாவின் முதல் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !