பிரகாசமான பட்டணம்
பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்தான் ஹிரண்யாட்சன். அவனை பன்றி உருவெடுத்து வந்த மகாவிஷ்ணு (வராக மூர்த்தியாக) கொன்றார். தன் தெற்றிப்பல்லால் பூமியைத் தாங்கினார். அப்போது வராகமூர்த்தியின் ஸ்பரிசத்தால் ஒரு அசுரப்பிள்ளை பிறந்தது. அவனே நரகாசுரன். அவனுடைய இயற்பெயர் 'பவுமன்'. இதன் பொருள் 'பூமியின் மகன்'. இந்தியாவின் வடகிழக்கு பகுதியை ஆட்சி செய்தான். 'ப்ராக்ஜோதிஷபுரம்' என தன் ஊருக்குப் பெயரிட்டான். 'பிரகாசமான பட்டணம்' என்பது பொருள். பெயரில் மட்டும் ஒளியை வைத்திருந்த அசுரன் பவுமனின் செயல்கள் எல்லாம் மக்களுக்கு இருளை உண்டாக்கும் விதத்தில் அட்டூழியமாக இருந்தன.