உள்ளூர் செய்திகள்

லஞ்சம் தவிர்!

கோவை மாவட்டம், சிங்காநல்லுார், உப்பிலிப்பாளையம், ரங்கசாமி நாயுடு நினைவு அரசு நடுநிலைப் பள்ளியில், 1974ல், 8ம் வகுப்பு படித்தேன். பள்ளியில் மதிய உணவாக, சிறிதளவு சாப்பாட்டுடன், இரண்டு ரொட்டி துண்டுகளும் கொடுப்பது வழக்கம்! நான் வறுமையில் வாடினேன். தாயில்லாததால் காலை உணவு அரிதாகத்தான் கிடைக்கும். இதை அறிந்த தலைமையாசிரியர் வேலுசாமியும், வகுப்பு ஆசிரியர் ஆறுமுகமும் எனக்கு சலுகைகள் தந்தனர். மதிய உணவின் போது எனக்கு மட்டும், மூன்று ரொட்டி துண்டுகள் கொடுத்து ஊக்கப்படுத்தினர்.நேர்மை, ஒழுக்கத்துடனும் வாழ வலியுறுத்தினர். அவர்கள் ஆதரவால் பட்டப்படிப்பு முடித்து, மின்வாரியத்தில் வருவாய் மேற்பார்வையாளராக சேர்ந்தேன். லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி பணியை கவனித்தேன். நற்பெயருடன் ஓய்வு பெற்றேன். என் வயது, 60; யாரிடமும் கையூட்டு பெறாமல், அரசு பணியை நிறைவேற்றியதற்கு, அந்த ஆசிரியர்கள் காட்டிய பரிவும், சொன்ன அறிவுரைகளுமே காரணம். அவர்களை மனதில் கொண்டுள்ளேன்.- கரு.உதயகுமார், கோவை.தொடர்புக்கு: 99655 95536


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !