பனங்கிழங்கு சப்பாத்தி!
தேவையானப் பொருட்கள்:பனங்கிழங்கு - 4அரிசி மாவு - 50 கிராம்துருவிய தேங்காய் - 1 கப்வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 2உப்பு - தேவையான அளவு.செய்முறை:பனங்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். அதனுடன், அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.அரைத்த மாவை உருட்டி, சப்பாத்தியாக்கி வேக வைக்கவும். சுவைமிக்க, 'பனங்கிழங்கு சப்பாத்தி' தயார். சுடச்சுட பரிமாறலாம். காலை உணவிற்கு ஏற்றது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.- ம.அதுஹ முன்னிஸ்ஸா, ராமநாதபுரம்