மூளை பாதுகாப்பு!
மூளையை பாதுகாக்க முன் எச்சரிக்கைகள்...* தலையை மூடியபடி துாங்க வேண்டாம். மூடினால் பிராணவாயு கிடைப்பது தடைபடும்* உடல் நலமில்லாத போது, தீவிரமாக படிப்பது போன்ற செயல்கள் மூளையை பாதிக்கும்* நல்ல சிந்தனை, அறிவு பூர்வ உரையாடல் மேற்கொண்டால் மூளை வலிமை பெறும்* நல்ல துாக்கம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும்* இரவு 10:00 முதல், அதிகாலை 4:30 மணி வரை துாங்கலாம்* சுத்தமான காற்றை சுவாசியுங்கள்; மாசு நிறைந்த காற்று மூளைக்கு ஆக்சிஜன் கிடைப்பதை தடுக்கும்* புகை பிடிப்போரை நெருங்க வேண்டாம்; புகையால் மூளை சுருங்கும்* அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்கவும்; இது, உடலில் புரோட்டீன் சேர்வதை தடுத்து, மூளை வளர்ச்சியை பாதிக்கும்* அளவுடன் சாப்பிடவும்; அதிக உணவு ரத்த நாளங்களை இறுக்கி, மூளை வலிமையை குறைத்து விடும்* காலை உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும்; அதுதான், மூளைக்கு ஊட்டத்தை கொடுக்கும்* கோபம் அறவே கூடாது. நற்குணங்களால் சிந்திக்கும் ஆற்றல் பெருகும். மூளை திறன் பெறும்.