உள்ளூர் செய்திகள்

வெந்தயக் கூழ்!

தேவையான பொருட்கள்:புழுங்கல் அரிசி - 200 கிராம்வெல்லம் - 250 கிராம்வெந்தயம் - 25 கிராம்உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:புழுங்கல் அரிசி, வெந்தயத்தை, அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைக்கவும். கெட்டியாக இல்லாமல், தண்ணீராக கலக்கி கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சவும்.தண்ணீரை கொதிக்க வைத்து, அரைத்த மாவை அதில் ஊற்றி கிளறவும். வெல்லப் பாகையும் ஊற்றவும். பின், உப்பு சிறிதளவு சேர்க்கவும். கெட்டி சேரவிடாமல் கிளறி இறக்கவும். சுவை மிக்க, 'வெந்தயக்கூழ்' தயார்!குழந்தைகள் முதல், பெரியவர் வரை விரும்பி உண்பர்; உடல் சூடு போக்க வல்லது.- ர.ரஞ்சிதா, தேனி.தொடர்புக்கு: 86800 54010


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !