உள்ளூர் செய்திகள்

காவிய தலைவன்!

கரூர், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 1957ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, தமிழ் மற்றும் சமஸ்கிருத ஆசிரியராக இருந்தார் வெங்கட்ராமன் சாஸ்திரி. வாரம் ஒருமுறை நீதிபோதனை வகுப்பு நடத்துவார். ராமாயணம், மகாபாரதம், சாகுந்தலம், குமாரசம்பவம், பெரியபுராணம் போன்றவற்றில் வரும் காட்சிகளை சுவாரசியமாக வர்ணித்துக் கூறுவார். அவை, மனதில் பதிந்தன. இலக்கியங்கள் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டது. கதை, கவிதைகள் எழுத துாண்டியது. என் விருப்பங்களை, 'பாரதிமகள்' என்ற புனைப்பெயரில் கதை, கவிதைகளாக எழுதிவருகிறேன். இதற்கு, அவரது ஆசியும், வழி காட்டலுமே காரணம் என நம்புகிறேன். இப்போது, என் வயது, 80; மரியாதைக்குரிய ஆசானின் காவிய அறிவுரைகள் நினைவுகளாக மனதில் தங்கியுள்ளன. என் அனுபவங்களை பேரப்பிள்ளைகளுடன் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்.- எஸ்.ராஜம், திருச்சி.தொடர்புக்கு: 94866 87394


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !