உள்ளூர் செய்திகள்

நலம் தரும் நெல்லிக்கனி!

தினமும் நெல்லிக்கனி சாப்பிட்டால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம். அதனால் தான், பழங்குடி இன மக்கள் தந்த நெல்லிக்கனியை, அறப்புலவர் அவ்வையாருக்கு வழங்கி, பழங்காலத்தில் தமிழ் வளர்த்தான், மன்னன் அதியமான்.சத்து மிக்க நெல்லிக்கனியை சாப்பிடும் முறை பற்றி பார்ப்போம்...* அப்படியே கடித்துச் சாப்பிடலாம்* சாறு பிழிந்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம்* கஞ்சியில் வெட்டிப் போட்டுச் சாப்பிடலாம்* காயை அரைத்து, உப்பில்லாத மோரில் கலக்கிக் குடிக்கலாம்* காலை வெறும் வயிற்றில், நெல்லிச்சாறு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.கரு நெல்லியும் நெல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. முற்றிய கனி புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். மிக அபூர்வமாக கிடைக்கும். நெல்லை மாவட்டம், பொதிகை மலைச்சாரலில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். நெல்லிக்கனி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டாக்சினை வெளியேற்றும். உடல் எடையைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். கண் பார்வை மேம்பட உதவும். கண் எரிச்சல், கண் சிவப்பது போன்ற பாதிப்புகளைக் குணமாக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும். கல்லீரலின் சீரான செயல்பாட்டுக்கு உதவும்.இதில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தைச் சீராக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ரத்த நாளங்களை சுத்தமாக்கும். நெல்லிக்கனியில் உள்ள இரும்புச் சத்து, புதிய செல்களை உருவாக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் தடுக்கப்படும்.நெல்லிக்கனி உண்டு நீண்டநாள் வாழ்வோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !