உள்ளூர் செய்திகள்

நெல்லிக்காய் பிரியாணி!

தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி - 100 கிராம்நெல்லிக்காய் - 50 கிராம்வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 3கொத்தமல்லி கீரை, புதினா, நெய், இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவுமஞ்சள் துாள், பட்டை, கிராம்பு, ஏலம், தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை:அரிசியை, 30 நிமிடம் ஊற வைக்கவும்.பாத்திரத்தில் நெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின், பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய், கொத்தமல்லி கீரை, புதினா சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், மஞ்சள் துாள், உப்பு சேர்த்து கிளறி, தண்ணீர் ஊற்றி வேக விடவும்.நன்றாக கொதித்ததும், ஊறிய அரிசியை போடவும்; மிதமான தீயில் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்; ஆவி அடங்கியதும் திறந்து கிளறவும்.சுவை மிக்க, 'நெல்லிக்காய் பிரியாணி!' தயார்! அனைவரும் விரும்பி உண்பர்; உடல் நலத்தைக் காக்கும்.- சுந்தரி காந்தி, சென்னை.தொடர்புக்கு: 70102 88530


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !