உள்ளூர் செய்திகள்

மதி!

''நாளை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு அறிவிக்கிற நாள். எப்படியாவது பள்ளிக்கு செல்ல வேண்டும். கொரோனா தொற்று அதிகமாக பரவி இருக்கு; சாலைகள் எல்லாம் வெறிச்சோடி இருக்கு; பேருந்துகளும் இல்லை; பாத்து பத்திரமா வாங்க டீச்சர்...'' அலைபேசியை துண்டித்தார் தலைமையாசிரியர்.மறுநாள் -டீச்சர், பள்ளிக்கு வந்த செய்தி அறிந்து மாணவ, மாணவியர் மகிழ்ச்சியில் ஓடோடி வந்தனர். வாசல் பூட்டப்பட்டிருந்தது; மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தை, கணினியில் பார்த்து குறித்து கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். வெளியே சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தார் டீச்சர். அலைமோதிய மாணவ, மாணவியரை விரட்டிக் கொண்டிருந்தார் காவலாளி.''என்னாச்சு... அவர்களை விடுங்க...''டீச்சர் சொன்னதும், கதவு திறக்கப்பட்டது.உள்ளே வந்ததும், 'வணக்கம்...' என்றனர். நலம் விசாரித்தபடி, கொரோனா தொற்று பற்றி எடுத்துரைத்தார் டீச்சர். உரிய இடைவெளி விட்டு பழக அறிவுரைத்தார். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வலியுறுத்தினார். அமைதியாக கேட்டனர் மாணவ, மாணவியர்.''தினமும், 'டிவி'யில் உங்களுக்காக தான் பாடம் நடத்துறாங்க... நல்லா கவனிக்கணும்; சந்தேகம் வரும் போதெல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; பள்ளி திறந்த பின், சொல்லிக் கொடுக்கிறேன்...'' என்றார் டீச்சர். ''அப்போ சீக்கிரமா திறந்துடுவாங்களா...''ஆவலோடு கேட்டான் மாணவன் மணி.''நிலைமை சரியானதும் திறந்துடுவாங்க... அதுவரை, 'டிவி'யில் வருகிற பாடத்தை படிங்க... கவனமாக சுத்தத்தை கடைபிடியுங்க''அறிவுரைத்த டீச்சரை வணங்கியபடி, கலைந்தனர் மாணவ, மாணவியர்.குழந்தைகளே... கொடுந்தொற்று காலத்தில், வகுக்கிற விதிகளை மதித்து நடக்க பழகுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !