உள்ளூர் செய்திகள்

அருமருந்து தயிர்!

உடலுக்கு குளிர்ச்சி தருவது தயிர். உணவு செரிமானத்துக்கு அருமருந்தாகிறது.பால் சாப்பிட்டால், 1 மணி நேரத்தில், 32 சதவீதம் தான் செரிமானமாகும். அதே நேரத்தில், 91 சதவீதம் செரிமானமாகிவிடும் தயிர். பால் புளித்தால் தயிர் ஆகும். அப்போது ஏற்படும், 'லாக்டொபசில்' அமிலம், செரிமான சக்தியை துாண்டும்; வயிற்று உபாதையை சரி செய்யும். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டால், தயிர் கலந்த உணவை பரிந்துரைப்பார் மருத்துவர்.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், வெந்தயம் சேர்த்த தயிர் சாப்பிடலாம். பிரியாணி போன்ற, சூடு தரும் உணவு வகைகளுடன், உப உணவாக வெங்காய தயிர் பச்சடி பரிமாறுவர். உடல் வெப்ப நிலையை சமன் செய்யும் வகையிலேயே இது பரிமாறப்படுகிறது.பாலை, தயிராக மாற்றும் பாக்டீரியா என்ற நுண்ணுயிரி, குடலில் நோய் கிருமி வளர்ச்சியை தடுக்கும். தயிரில், சர்க்கரை கலந்து கடைந்தால், 'லஸ்சி' என்ற இனிய பானம் கிடைக்கும். இது, நம் நாட்டில் வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். மண்கலங்களில் பருகுவர். அது, இனிய அனுபவம் தரும்.பாலில் தயாரிக்கும் பன்னீர் கட்டியில், சுவைமிக்க உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.தயிரைக் கடைந்தால் வெண்ணையும், மோரும் கிடைக்கும். மோரில் உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்தால், உன்னத பானமாக மாறும். கோடையில் இதற்கு இணையாக எதுவும் இல்லை. தயிரின் நன்மைகள்:* கை நிறைய தயிரை எடுத்து, தலையில் தேய்த்துக் குளித்தால், துாக்கம் நன்றாக வரும்* வெப்பத்தால் பாதிக்கப்படும் நரம்பு, தோல் பகுதியை பாதுகாக்கும்* மலச்சிக்கல், வயிற்றுப்போக்குக்கு அருமருந்து* தோல் நோய்க்கு நிவாரணம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !