உள்ளூர் செய்திகள்

தாயும் நீயே...!

நான் பத்தாம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்களது தமிழாசிரியை மிகவும் கண்டிப்பானவர். 'வணக்கம் அம்மா' என்று வாழ்த்துவதில் இருந்து, வகுப்பறையில் பேசும்போதெல்லாம், 'அம்மா, அம்மா' என்று தான் அழைக்க வேண்டும்.அவர்கள் சொல்ற, 'கடி ஜோக்ஸ்'க் கெல்லாம் சிரிக்கணும். அப்பத்தான் தமிழம்மாவுக்கு பிடிக்கும். ஆனால், மாணவியரை திட்டுவதை பார்த்தால் தாய்போல் திட்ட மாட்டார். பேய் மாதிரிதான் திட்டுவார். 'சாணி பொணம், சண்டி எருமை மாடு, பொட்ட கழுத...' இப்படித்தான் திட்டுவார்.ஒருமுறை, ஒரு மாணவியை சரமாரியாக இப்படித் திட்டிக் கொண்டிருந்தார். குறும்புக்கார மாணவி ஒருத்தி மெல்லிய குரலில், 'அம்மா... தாயும் நீயே திட்டுவதில் பேயும் நீயே!' என்றாலே பார்க்கலாம். அதிர்ந்துபோன தமிழம்மா, 'யாரது அந்த அதிகப்பிரசங்கி... எழுந்து நில்லு?' என்றார்.யாருமே வாயை திறக்கவில்லை. கோபத்தில் எல்லாருக்கும், 'இம்போசிஷன்' கொடுத்தார். இருந்தாலும் எங்களது தோழியை யாரும் காட்டிக் கொடுக்கவில்லை. அவமானமடைந்த தமிழம்மா அதிலிருந்து அதிகம் திட்டுவதில்லை.- லீமா, கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !