உழைப்பின் பெருமை!
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான தாமஸ் கார்லைல், பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து பிரெஞ்சுப் புரட்சி பற்றிய புத்தகத்தை எழுதி முடித்தார். அதை வெளியிடும் முன்பாக தன்னுடைய நண்பர் ஸ்டூவர்ட் மில்லிடம் படித்துப் பார்த்துக் கொடுக்குமாறு கேட்டார். சில நாட்கள் சென்ற பின் தனது கையெழுத்துப் பிரதியைப் பெற நண்பரிடம் வந்தார். நண்பர் கூறிய பதில் அதிர்ச்சி தந்தது.அதாவது, அவரது வேலைக்காரி பழைய பேப்பர் என்று நினைத்துக் குப்பையில் போட்டுவிட்டாளாம். தாமஸ் கார்லைலுக்கு எப்படி இருந்திருக்கும்! எத்தனை நாள் உழைப்பு?என்ன செய்வது? மனம் தளராமல் மீண்டும் பிரெஞ்சுப் புரட்சி பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிட்டார். உலகப் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றாக இன்னும் அது திகழ்கிறது.சில சமயங்களில் மிகச் சாதாரணமாக அசம்பாவி தங்கள் நடந்து விடுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலை களில் சோர்ந்து போகாமல் மனதைத் தேற்றிக் கொண்டு முயற்சித்து வெல்வதுதான் மகத்தான சாதனை என்பதை நிரூபித்தார் தாமஸ் கார்லைல்.நீங்களும் தோல்விகளை கண்டு மனம் தளராதீங்க குட்டீஸ்!