உள்ளூர் செய்திகள்

டால்பின்!

பாலுாட்டி வகை உயிரினம் டால்பின். இதில், 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் பாட்டில் மூக்கு டால்பின் வினோதமானது. இது, திமிங்கல வகையை சேர்ந்தது. ஆனால், பற்கள் கோரமாக இருக்காது. இதன் முதுகு பகுதி அடர் சாம்பல் மற்றும் கறுப்பு நிறங்களில் இருக்கும். வயிற்றுப் பகுதி வெள்ளையாக இருக்கும். உடல் ரப்பர் போல் வழுவழுப்பாக இருக்கும்.இந்த விலங்கினத்தின் ஆயுட்காலம், 25 ஆண்டுகள். சராசரியாக, 8.5 அடி நீளம் வரை வளரும். இறால், சிறு மீன்களை உண்டு வாழும். 100 கிலோ எடை உள்ள டால்பின் ஒரு நாளில், 30 கிலோ எடையுள்ள உணவை உண்ணும்.இதன் கர்ப்ப காலம், 12 மாதங்கள். குட்டி போட்டு பால் கொடுக்கும். பிரசவத்தில், குட்டியின் வால் பகுதி தான் முதலில் வெளி வரும். பிறந்தவுடன் குட்டியை நீரின் மேல்பரப்புக்கு எடுத்து சென்று, சுவாசிக்க வழி செய்யும். இதே முறையில் தான் கடலில் விழும் மனிதர்களை, டால்பின் காப்பாற்றி கரை சேர்க்கிறது. குட்டி, ஒன்றரை வயது வரை, தாயின் அரவணைப்பில் இருக்கும்; தாய்ப்பால் அருந்தும்.டால்பின், சராசரியாக மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் நீந்தும். 30 அடி உயரம் வரை, துள்ளி குதிக்கும். உடல் சூட்டை நிர்வகிக்க காற்றை சுவாசித்தே ஆக வேண்டும். எனவே, இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை, நீர் பரப்பிற்கு வரும். இந்த கடல் உயிரினம்...நாயை விட புத்திசாலிஎளிதில், எதையும் கற்றுக்கொள்ளும்வீசும் பந்துகளை பிடிக்கும்தாவி விளையாடி வித்தைகள் செய்யும். ஒரே நேரத்தில் ஆயிரம் டால்பின்கள் வரை கூட்டமாக செல்லும்.எப்போதும் ஒரு கண் விழித்துக் கொண்டிருக்கும். நாள் முழுதும் துாங்கினால், இறந்து விடும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.- எஸ்.ராமதாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !