பனி விழும் திகில் வனம்! (15)
முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. எச்சரிக்கையை மீறி இமயமலையில் ஏறிய அவளது தந்தை துருவ், இறந்துவிட்டதாக அமைச்சகம் தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த மிஷ்கா, தொடர்பு கொண்ட அமைச்சக அதிகாரியிடம் கடுமையாக வாதிட்டாள். இனி -தலைவிரி கோலமாய் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள் மிஷ்கா. மடியிலிருந்த அம்மா சிலை மானசீகமாக பேசியது.'மிஷ்கா...'''சொல்லும்மா...'' 'அப்பா உயிருடன் தான் இருப்பார். என் மனம் கூறுகிறது...' ''சொல்வது போல் நடக்கட்டும் அம்மா...'''அப்பா உனக்கு உயிருடன் கிடைக்க நான் சொல்வதை செய்வாயா...' ''சொல்லம்மா, காத்திருக்கிறேன்...'''இன்றிலிருந்து ஸ்ரீராமஜெயம், 1 லட்சம் முறை எழுது. எழுதும் போதே, உன் அப்பா கிடைத்து விடுவார்...'''இப்போதே எழுத ஆரம்பிக்கிறேன்...''ஒரு கோடு போடாத நீள அளவு 240 பக்க நோட்டில் எழுத ஆரம்பித்தாள் மிஷ்கா.'மூன்று நாள் விரதம் இரு...'''இருக்கிறேன் அம்மா... இவையெல்லாம் மூடநம்பிக்கள் இல்லையா...'''மெய்யான பக்தி வீரியமனது. அது எந்த தடையையும் துாள்துாளாய் தகர்க்கும்...'''அப்ப சரி...'''மகளே மிஷ்கா... இறைவன் கருணையின் வடிவானவன். அம்மா என்ற ஒரு கதவை மூடி, அப்பா என்ற கதவை திறந்தே வைத்திருப்பான். ஒரு மனிதன் உயிரோடு இருப்பதற்கும், இல்லாமல் போவதற்கும் இறைவனின் அகராதியில் தனி அர்த்தம் உண்டு. தனக்கு மிகவும் பிடித்தமானவர்களை தான் இறைவன் அதிகம் சோதிக்கிறான். இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடை. இழந்து போக இருந்த உறவை மீட்டு தருவான்...'மிஷ்காவின் உடலில் புது சக்தி புகுந்திருந்தது.மீண்டும் திறன்பேசி சிணுங்கியது.எடுத்து காதில் இணைத்தாள் மிஷ்கா.எதிர்முனையில் அமைச்சக அதிகாரி.''மிஷ்கா... எப்படி இருக்கிறாய்...''''இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறேன்...''''லேட்டஸ்ட் செய்திகளை கொண்டு வந்திருக்கிறேன்...''''நல்லசெய்தியா, கெட்ட செய்தியா...''''உன் அப்பாவை தேடும் ெஷர்பா மக்கள் டாலர் வடிவில் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு அலங்காரப் பேழை இணைக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார பேழைக்குள் நீயும், உன் தந்தையும் ஒளிப்படமாக சிரிக்கிறீர்...''''அப்பா...'' பெருங்குரலெடுத்து கதறினாள் மிஷ்கா.''உன் அப்பாவை உயிருடன் மீட்கும் நம்பிக்கை சிறிது சிறிதாய் கரைகிறது. மிகப் பெரிய துக்கத்துக்கு தயாராக வேண்டும்...''கண்ணீரை முகம் முழுக்க இழுவி தேய்த்துக் கொண்டாள் மிஷ்கா.''இல்லை... ஒரு மிகப்பெரிய சந்தோஷத்துக்கு நாம் தயாராக வேண்டும்...''''நீ லட்சம் சதவீத ஆப்டிமிஸ்ட்...''''வானமே இடிந்தாலும் சூரியன், நிலா, நட்சத்திரங்கள் உதிர்ந்தாலும் மனம் கலங்க மாட்டேன்...''''அவ்வளவு நம்பிக்கை உள்ளவள் அழக்கூடாது...''''அழுது தேற்றிக் கொள்கிறேன்...''''இன்னொரு முக்கிய விஷயம்...''''என்ன?''''உன் தந்தையுடன் சுமைகளை துாக்கி சென்ற ெஷர்பாக்களில் ஒருவர் பிணமாய் மீட்கப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது...''''மீ காட்...''''தலை துண்டிப்பு சாதாரணமாக தெரியவில்லை. மனிதரை விட நுாறு மடங்கு அசுர பலம் உடைய ஒரு ஜந்து தான் ெஷர்பாவின் தலையை துண்டித்திருக்க வேண்டும்...''''ெஷர்பாவின் உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி இருக்கின்றனரா...''''ஆமாம்...''''தேடுதல் வேட்டையில் இறங்கிய நுாறு ெஷர்பாக்களில், ஐம்பது பேர் அடிவார முகாமுக்கு திரும்பி விட்டனர். அவர்கள் துருவ் உயிருடன் இருக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என கூறி விட்டனர்...''''நோ... எவரெஸ்ட் சிகரமே, 'என் தந்தை உயிருடன் இல்லை' என கூறினால் கூட நம்ப மாட்டேன். என் அப்பா உயிருடன் இருக்கிறார்...''''இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை...''''என்னுடன் பேசி பேசி சலிப்படைந்து விட்டால் இனி பேசாதீர்...''''எனக்கு வேறு பணிகள் கொடுத்திருக்கின்றனர். நன்கு படித்து முன்னேறும் வேலையை பார் மிஷ்கா...''''எனக்கு என் அப்பா தேவை...''''நோ சான்ஸ்...''''நான் ஒரு விஷயத்தை அறிவிக்கப் போகிறேன்...''''என்ன...''''நானே எவரெஸ்ட் சிகரம் ஏறி காணாமல் போன என் தந்தையை மீட்கப் போகிறேன்...''''ஆர் யு மேட்... இம்பாசிபிள்...''''இதோ கிளம்புகிறேன்... என் தந்தையை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் எவரெஸ்ட் மீது தேசியக்கொடியை நாட்டுவேன்...'' சூளுரைத்தாள் மிஷ்கா.- தொடரும்...- மீயாழ் சிற்பிகா